டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த அஸ்வின்.. தமிழில் வாழ்த்திய சச்சின்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

இதில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று ( பிப்ரவரி 9 - 13) நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அதன்படி, ஆஸ்திரேலியா அணி 63.5 ஓவர்களில் 10 விளையாட்டுகளையும் இழந்து 177 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களும், ஷமி மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதில், இந்திய அணியில் பந்து வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட்டுகள் எடுத்த 3வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதனையடுத்து அஸ்வினுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் 'அற்புதமான மைல்கல்.. வாழ்த்துக்கள் ரவிச்சந்திரன்' என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sachin wished in tamil to ravichandran Ashwin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->