அர்ஜென்டினாவை தோற்கடித்த சவுதி அரேபிய வீரர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் கொடுத்த சவுதி மன்னர்.!
saudi arabia king announce rolls rays car to football players
கத்தார் நாட்டில் நடந்து வரும் ஃபிபா உலகக்கோப்பை கால் பந்து போட்டியில் சென்ற நவம்பர் 22 ஆம் தேதி அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின.
இந்த கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவை 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபிய அணியானது தோற்கடித்த வெற்றி கண்டது. சவுதியில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சவுதி மன்னர் சல்மான் மறுநாள் தேசிய விடுமுறையை அறிவித்தார்.
இதை தொடர்ந்து அர்ஜென்டினாவை தோற்கடித்த சவூதி அணி கால்பந்து வீரர்களுக்கு ஒரு விலை உயர்ந்த பரிசை சல்மான் அறிவித்து இருக்கிறார். அதன்படி அர்ஜென்டினாவை வீழ்த்துவதற்கு காரணமாக இருந்த ஒவ்வொரு கால்பந்தாட்ட வீரர்க்கும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரை அவர் பரிசாக அறிவித்து இருக்கிறார்.
இந்த ஒவ்வொரு காரும் இந்திய மதிப்பில் 9 முதல் 11 கோடி வரை விலை மதிப்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண லீக் போட்டியில் வெற்றி பெற்றதற்கு இவ்வளவு கொண்டாட்டம் என்றால் அரையிறுதி மற்றும் சூப்பர் 16 உள்ளிட்டவற்றில் நுழையும்போது சவுதி மன்னர் எப்படிப்பட்ட பரிசு கொடுப்பார் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இது கால்பந்து ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் விதமாக இருக்கிறது.
English Summary
saudi arabia king announce rolls rays car to football players