#BHARAT || நமக்கான உண்மையான பெயர் "பாரத்"! BCCI-க்கு வீரேந்திர சேவாக் விடுத்த கோரிக்கை! - Seithipunal
Seithipunal


மத்திய பாஜக அரசு இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்களுக்கு வரும் செப்டம்பர் 9ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்ட அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளமான எக்ஸில் இணையதள வாசி ஒருவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த செப்டம்பர் 2ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் எதிரான ஆட்டத்தினை #BHAvsPAK என குறிப்பிட்ட பதிவிட்டு இருந்ததை மேற்கோள் காட்டி வீரேந்திர சேவாக்குக்கு முன்பே தெரிந்துள்ளது என  பதிவிட்டு இருந்தார்.

அதற்கு பதில் அளித்துள்ள வீரேந்திர சேவாக் "ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாம் அனைவரும் பாரதத்தை சேர்ந்தவர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர் மற்றும் நமக்கான உண்மையான பெயர் 'பாரத்' அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட கால தாமதமாகிவிட்டது.

இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் பாரதத்தை அவர்களின் நெஞ்சில் சுமந்து வைத்திருப்பதை உறுதி செய்ய பிசிசிஐ மற்றும் ஜெய்ஷாவை கேட்டுக்கொள்கிறேன்.

1996 உலகக் கோப்பையில், நெதர்லாந்து ஹாலந்து என்ற பெயரில் உலகக் கோப்பையில் விளையாட வந்தது. 2003இல் நாங்கள் அவர்களைச் சந்தித்தபோது ​​அவர்கள் நெதர்லாந்து என இருந்தனர். தொடர்ந்து நெதர்லாந்து என இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் வைத்த பெயரை பர்மா மீண்டும் மியான்மர் என மாற்றியது. மேலும் பலர் தங்கள் அசல் பெயருக்கு திரும்பிவிட்டனர்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sehwag requests BCCI to change cricket team name as Bharat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->