தோல்வியை ஏற்றுக்கொண்டு வெளியேற வேண்டும்.. கோலி - காம்பீர் மோதல் குறித்து ஷேவாக் கருத்து.!   - Seithipunal
Seithipunal


விராட் கோலி - கம்பீர் இடையேயான மோதல் குறித்து முன்னாள் இந்திய வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் லக்னாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முடிவில் பெங்களூர் அணியை சேர்ந்த விராட் கோலிக்கும், லக்னோ அணியை சேர்ந்த கௌதம் கம்பிருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து விராட் கோலி, கம்பீர் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் விராட் கோலி கம்பெனி மோதல் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் பேசியதாவது விராட் கோலி - கம்பீர் இடையேயான களத்தில் நடந்த மோதல் சரியானது அல்ல. தோற்றவர்கள் அமைதியாக தோல்வி ஏற்றுக்கொண்டு வெளியேற வேண்டும். வெற்றி பெற்ற அணி கொண்டாட வேண்டும். ஏன் வார்த்தை போரில் ஈடுபட வேண்டும்? இவர்கள் இருவரும் இந்தியாவின் அடையாளங்கள் இது போன்ற செயல்களால் இவர்களை பின் தொடரும் பல இளைஞர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shewag speech about Kohli and gambhir fight


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->