கிரிக்கெட்டில் கோலியை விட சிறந்த வீரரை நாம் காணமுடியாது - பாகிஸ்தான் முன்னாள் வீரர்.! - Seithipunal
Seithipunal


ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை  எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்தியா திரில் வெற்றி பெற்றது.

இதில் டாஸ் வென்று இந்தியா முதலில் பந்துவீச 159 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்பரங்களில் அவுட் ஆகி வெளியேறினர்.

எதிர்முனையில் விராட் கோலி பொறுமையாக விளையாடி வந்தார். 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹார்திக் பாண்டியாவும் - விராட் கோலியும் 113 ரன்களை குவித்தனர். 45 வது பந்துகள் வரை பொறுமையாக விளையாடிய விராட் கோலி அதன் பின்னர் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். விராட் கோலி 53 பந்துகளை எதிர் கொண்டு 82 ரன்களை விளாசினார். இதன் மூலம் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து விராட் கோலியின் பேட்டிங்கை ரசித்த ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் விராட் கோலியின் பேட்டிங் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் ' டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் கோலியை விட சிறந்த வீரரை நாம் காணமுடியாது. அவர் ஒரு பீஸ்ட். அவரால் நிலைத்து நின்று பொறுமையாக விளையாடவும் முடியும், சிக்ஸர்கள் விளாசி இன்னிங்ஸை முடிக்கவும் முடியும்' என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shoaib Malik speech about Virat Kohli batting against Pakistan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->