துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் சச்சின் டெண்டுல்கருடன் நேரில் சந்திப்பு! - Seithipunal
Seithipunal


துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்கள் வென்றது. இதில் 2 வெண்கலப்பதக்கங்களை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர்  வென்று சாதனை படைத்தார்.

இதனையடுத்து மனு பாக்கர் அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இந்தியா வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் தான் வென்ற ஒலிம்பிக் பதக்கங்களுடன், இன்று நேரில் சந்தித்துள்ளார்.

மனு பாக்கர் இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்து பதிவிட்டுள்ளார், இந்த சிறப்பு தருணத்தை கிரிக்கெட் ஐகானுடன் பகிர்ந்து கொள்வதை ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். 

அவரது பயணம் என்னையும் எங்களில் பலரையும் எங்கள் கனவுகளைத் துரத்தத் தூண்டியது. மறக்க முடியாத நினைவுகளுக்கு நன்றி சார் என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shooter Manu Bhaker meets Sachin Tendulkar in person


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->