காயம்பட்ட முக்கிய வீரர்! WTC, ஐபிஎஸ் தொடரிலிருந்து விலகளா?! பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக, ஐபிஎல் 2023 மற்றும் WTC (உலக கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் சேம்பியன்) இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மிடில் வரிசை பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் அய்யருக்கு முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் 4-வது நாளில் விலகினார். 

ஏற்கனவே முதுகு வலி பிரச்சினையால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை தவற விட்ட ஷ்ரேயாஸ் அய்யர், தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், ஷ்ரேயாஸ் அய்யர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய நான்கு முதல் 5 மாதங்கள் வரை ஆகும் என்று தெரிகிறது. 

இதன் காரணமாக வரும்  31-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் ஷ்ரேயாஸ் அய்யர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன்) விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

மேலும், உலக கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் சேம்பியன் (WTC)  ஆட்டத்திலும் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shreyas Iyer set to miss IPL 2023 and WTC Final


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->