SLvsIND: டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு! வெளியேறிய முக்கிய வீரர்கள்! - Seithipunal
Seithipunal


இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. 

முதலில் வருகின்ற 27 ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் தொடங்க உள்ளது. ஏற்கனவே இந்த டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 

டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்: 

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), 
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், 
சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், 
வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் , அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது. சிராஜ்.

இந்த நிலையில், இந்த டி20 தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் முக்கிய வீரர்களான தனஞ்ஜெயா மற்றும் மேத்யூஸ் ஆகிய இருவரும் இடம்பெறவில்லை.

மேலும், சதீர சமரவிக்ரம மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகிய நட்சத்திர வீரர்களும் இந்த டி20 தொடரில் களம் இறங்காமல் வெளியேறியுள்ளனர். இவர்களுக்கு பதிலாக சமிந்து விக்ரமசிங்க, பினுர பெர்னாண்டோ மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இளம் வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

டி20 தொடருக்கான இலங்கை அணி வீரர்களின் விவரம்:

சரித் அசலங்க (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் ஜனித் பெரேரா, 
அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், 
கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனகா, வணிந்து ஹசரங்கா, 
துனித் வெல்லலகே, மகேஷ் தீக்ஷனா, சமிந்து விக்ரமசிங்க, 
மதீஷ பத்திரனா, நுவான் துஷாரா, துஷ்மந்த சமீரா, பினுர பெர்னாண்டோ.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SLvsIND T20 series 2024 Team SriLanka Asalanka 


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->