பதும் நிசாங்கா அதிரடி சதத்தால் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது இலங்கை அணி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 13-வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒரு நாள் போட்டியில் உலக தரவரிசை பட்டியலில் முதல் 8 இடம் பெற்ற அணிகள் நேரடியாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள நிலையில் மீதமுள்ள 2 இடத்தை பிடிக்கும் அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று முடிந்தது.

இதனை தொடர்ந்து சூப்பர் 6 சுற்று தற்பொழுது நடைபெற்று வருகிறது இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஓமன் அணிகள் உலக கோப்பையில் தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது. சூப்பர் சிக்ஸஸ் ஆட்டத்தில் நேற்றையப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் ஸ்காட்லாந்திடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் போட்டியிலிருந்து வெளியேறியதால் இலங்கை, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நான்கு அணிகளுக்கு இடையே உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதற்காக கடும் போட்டி நிலவுகிறது.

 

இன்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் இலங்கை அணி ஜிம்பாவே அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் ஓவரில ஜிம்பாப்வே அணியினர் விக்கெட்டை இழந்து நிலையில் அடுத்து களம் இறங்கிய கேப்டன் வில்லியம்ஸ் மற்றும் சிக்கந்தர் ராஸா ஜோடி ஓரளவு பார்ட்னட்ஷிப் அமைத்தனர்.

கேப்டன் வில்லியம்ஸ் 56 ரன்களுக்கும் சிக்கந்தர் ராஸா 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க பின்னர் வந்த ரொம்பவே அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால்  32.2 ஓவரில் ஆல் அவுட் ஆன ஜிம்பாப்வே அணி 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணி தரப்பில் தீக்‌ஷனா 4 விக்கெட்டுகளும், மது ஷனகா 3 விக்கெட்டுகளும், பதிரானா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதனை அடுத்து 166 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டிமுத் கருணரத்னே 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அவருடன் களமிறங்கிய பதும் நிசங்கா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 101 ரன்களை குவித்தார். அவருடன் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குஷால் மெண்டிஸ் 25 ரன்களை எடுத்தார். இலங்கை அணி 166 ரன்னை 33.1 ஓவரில் எட்டியது. இதன் மூலம் இலங்கை அணி 9 விட்கெட்டுகள் வித்யாத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக உலக கோப்பைக்கு தகுதிப்பெற்றுள்ளது. 

இன்றைய தோல்வியால் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே தோல்வியடைந்தால் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை கிழக்கு நேரிடும். இதன் காரணமாக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lankan team has qualified for the World Cup


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->