நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் ரெய்னா இல்லை.. அதிகாரப்பூர்வ தகவல்.! - Seithipunal
Seithipunal


கடந்த வருடம் வரை மொத்தம் 8 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வந்த நிலையில், இந்த வருடம் ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளது. அதற்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த தொகைகளுக்கு தங்களுக்கு தேவையான வீரர்களைத் தேர்ந்தெடுத்து கொண்டனர். 

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத நடைபெற்ற, இந்த ஏலத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுக்கு தேவையான வீரர்களை சரியாக தேர்வு செய்து புதிய அணியை ஒன்றை கட்டமைத்து விட்டாலும், சுரேஷ் ரெய்னா மற்றும் டூபிளசியை ஏலத்தில் எடுக்காமல் விட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டூபிளசியை பெங்களூரு அணி 7 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டது, ஆனால், சுரேஷ் ரெய்னாவை ஒரு அணி கூட ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. யாரும் சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்காததால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி சுற்றில் அவரை எடுக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்த காத்திருந்தனர். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை கண்டுகொள்ளவில்லை. அனுமதிக்கப்பட்ட 25 வீரர்களுடன் ஏலம் நிறைவு செய்தது. 

இந்நிலையில், மிஸ்டர் ஐபிஎல்  என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட யாரும் எடுக்காதது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுமே சுரேஷ் ரெய்னாவிற்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என தங்களது வருத்தத்தை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suresh raina unsold in ipl


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->