மாபெரும் சாதனையை நிகழ்த்த போகும் சாஹல்! இந்தியாவின் முதல் வீரர்! உலகின் மூன்றாவது வீரர்!
T20 Cricket First Indian player Chahal
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஆடி வருகிறது.
ஏற்கனவே இரண்டு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரையும், மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், தற்போது நடந்து கொண்டிருக்கும் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி திரில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த பரபரப்பான டி20 தொடரில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்த காத்திருக்கிறார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் அறிமுகமான சாஹல், இதுவரை 76 ஆட்டம் 76 டி20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.
இதன் மூலம் 93 விக்கெடுகளை வீழ்த்தி, டி20 ஆட்டங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளராக முதலிடம் பிடித்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில புவனேஷ் குமார் 90 விக்கெட்களுடனும், மூன்றாவது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் 72 விக்கெட்களுடன் உள்ளனர்.
இந்த டி20 தொடரில் சாஹல் மேலும் 7 விக்கட்டுகளை வீழ்த்தினால், சர்வதேச கிரிக்கெட் டி20 ஆட்டங்களில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்து பேச்சாளர் என்ற மாபெரும் சாதனையை சாஹல் நிகழ்த்துவார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பட்டியலில் வங்கதேச அணியின் ஆல் ரவுண்டர் சாஹிப் அல் ஹசன் 140 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
நியூசிலாந்து வீரர் டிம் சவுதி 134 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 130 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
T20 Cricket First Indian player Chahal