டி20 உலகக்கோப்பை : வாழ்வா? சாவா? போட்டியில் ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை.!
T20 World Cup AUS vs IRE match today
டி20 உலக கோப்பையில் இன்று ஆஸ்திரேலியா அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறுகிறது.
குரூப் 1 பிரிவில் அரையிறுதிக்கு தகுதி வேண்டுமென்றால் இந்த போட்டி இவ்விரு அணிக்களுக்கும் முக்கிய போட்டியாக கருதப்படுகிறது. அதன்படி இந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து அணிகள் இதுவரை தலா 3 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இரு அணிகளும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டி மழையால் தடை 3 புள்ளிகளை பெற்றுள்ளது.
அதன்படி, புள்ளி பட்டியலில் அயர்லாந்து அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 4-வது இடத்திலும் உள்ளது. அதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி இன்றைய போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
சொந்த மண்ணில் விளையாடும் ஆஸ்திரேலியா அணிக்கு ரசிகர்களின் ஆதரவு கூடுதல் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இங்கிலாந்தை வீழ்த்திய அயர்லாந்து அணி அதே உத்வேகத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலக கோப்பையில் இதுவரை நேருக்கு நேர்
டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அயர்லாந்து அணிகள் இதுவரை ஒரே ஒரு போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.
English Summary
T20 World Cup AUS vs IRE match today