டி20 உலகக்கோப்பை : அயர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணயித்த ஆஸ்திரேலியா.. வெற்றி யாருக்கு.?
T20 World Cup Australia target of 180 against Ireland
டி20 உலக கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா அணி.
ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணியில் சிறப்பாக விளையாடிய ஆரோன் பின்ச் 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.
அதனைத் தொடர்ந்து 180 வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்க உள்ளது. இன்றைய தினம் தோல்வியடையும் அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
T20 World Cup Australia target of 180 against Ireland