#T20WorldCup : பாகிஸ்தானுக்கு தண்ணிகாட்டிய பென் ஸ்டோக்ஸ்.. இங்கிலாந்து அணி சாம்பியன்.! - Seithipunal
Seithipunal


டி20 உலகக்கோப்பை பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது.

இதில் சூப்பர் 12 சுற்றுகளின் முடிவில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும், இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய சாம் கரண் 3 விக்கெட்களும், அடில் ரஷித் 2 விக்கெட்களும், கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் நடப்பாண்டு டி20 உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வென்றுள்ளது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 52 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் இங்கிலாந்து அணி  2வது முறையாக டி20 கோப்பையை வென்றுள்ளது. இதற்குமுன் 2010ம் ஆண்டு இங்கிலாந்து அணி டி20 உலகக்கோப்பை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup England beat Pakistan and champion


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->