இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் அரையிறுதி போட்டி மழையால் தடைபட வாய்ப்பு.? - Seithipunal
Seithipunal


ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில் சூப்பர் 12 சுற்றுகளின் முடிவில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
 
அதனைத் தொடர்ந்து நாளை  (நவம்பர் 10ம் தேதி) நடைபெறும் மதியம் 1.30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து  அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் தற்போது அடிலெய்டு மைதானத்தில் மழை பெய்து வருகிறது இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து அடிலெய்டு நகர வானிலை அறிக்கையில், டாஸ் போடும் நேரம் வரை மழை பெய்ய 7% சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளது. அதேபோல் போட்டி தொடங்கும் போது வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ் ஆக குறையும் என்றும் மழைக்கான வாய்ப்பு 5% சதவீதம் மட்டுமே இருக்கும்.

அதேபோல், போட்டி தொடங்கி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணி அளவில் மழைக்கான வாய்ப்பே இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருவேளை இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டாலும், ரிசர்வ் நாளை ஐசிசி வைத்துள்ளதால் இரண்டாம் நாளான (நவம்பர் 11ஆம் தேதி) ஆட்டம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது நாளிலும் மழை பெய்து ஆட்டம் தடைபட்டால் புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup IND vs ENG semifinal match possible to interrupt to rain


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->