டி20 உலகக்கோப்பை : இந்தியா - நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்.!
T20 World Cup IND vs NED Match today
டி20 உலகக்கோப்பையில் இந்தியா நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது 2வது போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்த நிலையில் இன்று டி20 உலகக்கோப்பையில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டி இன்று மதியம் 12.30 மணிக்கு சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது.
டி20 உலக கோப்பையில் இந்தியா நெதர்லாந்து அணிகள் இதுவரை ஒரு முறை கூட விளையாடியது இல்லை. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.
English Summary
T20 World Cup IND vs NED Match today