டி20 உலகக்கோப்பை : கோலி - சூர்யா அதிரடி ஆட்டம்.. நெதர்லாந்துக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி.!
T20 World Cup India target of 180 against nedharland
டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிமலையில் இன்று டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது 2வது போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் இந்திய ஏஅணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்த ம இன்று டி20 உலகக்கோப்பையில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டி இன்று மதியம் 12.30 மணிக்கு சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி, பேட்டிங் செய்ய தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். இதில் வந்த வேகத்தில் கே எல் ராகுல் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதன் பிறகு ரோகித் சர்மா விராட் கோலி ஜோடி நிதானமாக விளையாடியது. இந்த ஜோடி 12 ஓவர்களில் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோகித் சர்மா 39 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அதன் பிறகு இணைந்த விராட் கோலி சூரியகுமார் யாதவ் ஜோடி நெதர்லாந்தின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுரமும் சிதறடித்தனர். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்துள்ளது. இதில் விராட் கோலி 44 பந்துகளில் 64 ரன்களும், சூரிய குமார் யாதவ் 25 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.
அதைத் தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்க உள்ளது.
English Summary
T20 World Cup India target of 180 against nedharland