டி20 உலகக்கோப்பை : நாளை இந்தியா - ஆஸ்திரேலியா பயிற்சி போட்டி.. எந்தெந்த சேனல்களில் பார்க்கலாம்.! - Seithipunal
Seithipunal


ஐசிசி 8வது டி20 உலக கோப்பை இன்று முதல் (அக்டோபர் 16 ) முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

 இதில், மொத்தம் 16 அணிகள் விளையாடுகின்றன. இதில் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

இதில், மீதமுள்ள 4 இடங்களுக்கு முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும்,  ‘பி’ பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள 8 அணிகளும் நாளை முதல் முதல் பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. அந்த வகையில் நாளை காலை 9.30 மணிக்கு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல் பயிற்சி போட்டியில் விளையாடுகின்றன.

இந்த நிலையில் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெலுங்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கன்னடம் மற்றும் ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பபடுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup warm up match IND vs AUS when and how to watch


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->