டி20 உலகக் கோப்பை : பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் முன்னாள் சேம்பியன் பாகிஸ்தானை அணியை அறிமுக அணியான அமெரிக்கா வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.

 டி 20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 11 வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது அமெரிக்கா அணி. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்தது. அதில் அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 44 ரன்களும், ஷதாப் கான் 40 ரன்கள் விளசினார்கள்.

போட்டியின் இரண்டாம் பாகத்தில் அடுத்து களம் இறங்கியது அமெரிக்கா அணி. தொடக்க ஆட்டக்காரரான டேய்லர் 12 ரன்னுக்கு விக்கட்டை இழந்து அதிர்ச்சி அளித்தார். பின்னர், படேல், கவுஸ் இணைந்து அலியின் ரன்னை உயர்த்தினார்கள். அதிகபட்சமாக படேல் 50 ரன்களும் கவுஸ் 35 ரன்களும் விளாசினார்கள். 20 ஓவர் முடிவில் அமெரிக்கா 159 ரன்களை எடுத்ததால் ஆட்டம் டையில் முடிந்தது.

ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய அமெரிக்கா அணி 18 ரன்களை குவித்தது. பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கடைசிப் பந்தியில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பாகிஸ்தானை அணிக்கு 1 ரன் மட்டுமே கிடைத்தது. இதனால் அமெரிக்க அணி பாகிஸ்தான் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பலம் வாய்ந்த முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணியை அமெரிக்க அணி வெற்றி பெற்றது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20World Cup Pakistan beat America won match


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->