செஸ் போட்டி - உலகளவில் சாதனை படைத்த தமிழக வீரர்..! - Seithipunal
Seithipunal


2024க்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின் இருவரும் விளையாடி வந்தனர். 

மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் சுற்றில் டிங்கும் மூன்றாவது சுற்று போட்டியில் குகேஷூம் வெற்றி பெற்றனர். அதன் பின்னர் நடைபெற்ற 4-வது சுற்றிலிருந்து 10-வது சுற்று வரை போட்டி சமநிலையிலேயே முடிவடைந்தது. இதனையடுத்து, 11 மற்றும் 12-வது சுற்றுகளில் குகேஷ் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றார்.

ஆனால், 13-வது சுற்றில் இருவரும் தலா 6.5 என்ற புள்ளியை பெற்றுக்கொண்ட நிலையில், அது சமநிலையில் தான் முடிந்தது. ஆகவே, இருவரும் சமநிலையான புள்ளிகளை பெற்றுள்ள காரணத்தால்  14-வது சுற்றில் வெற்றிபெறுபவர் தான் வெற்றியாளர் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 14ஆவது சுற்றில் சீன டிங்லீனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன்மூலம் உலக சாம்பியனான மிக இளம் வயது வீரர் எனும் பெருமையை குகேஷ் பெற்றிருக்கிறார். இதையடுத்து 18 வயதான தமிழக வீரர் குகேஷ்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu player kugesh won world chess competition


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->