3வது நாள்... திணறிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. ஃபாலோ-ஆனில் தப்பி 296 ரன்னுக்கு ஆல் அவுட்..!! - Seithipunal
Seithipunal


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த மே 7ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி பில்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து தொடக்க வீரராக களமிறங்கிய கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறிய நிலையில் டேவிட் வார்னர் 43 ரன்களை எடுத்து வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்தது 2 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி தடுமாறியது. நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவீஸ் ஹெட் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. ன ஹெட் 163 ரன்களுக்கும் ஸ்மித் 121 ரன்கள் வெளியேற அதிரடியாக ஆடிய அலெக்ஸ் கேரி 48 ரண்களுக்கு வெளியேறினார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு வெளியேறியதால் 469 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும் முகமது ஷமி மற்றும் சர்தல் தாகூர் தலா 4 விக்கெட்களையும் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய இந்திய அணியில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்திய அணி 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

அதனைத் தொடர்ந்து 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஜிங்கிய ரகானே மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை பொறுப்புடன் ஆடியது. சரிவில் இருந்த இந்திய அணியை மீட்ட ரவீந்திர ஜடேஜா 48 ரன்கள் அவுட் ஆகி வெளியேறினார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் பரத் 5 ரன்களுக்கு வெளியேறி இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் இந்திய அணி ஃபாலோ ஆன் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில ரகானே உடன் ஜோடி சேர்ந்த ஷர்துல் தாகூர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் சேர்ந்து 109 ரன்களை குவித்தனர். 

இதனால் இந்திய அணி ஃபாலோ ஆனில் இருந்து தப்பிய நிலையில் ரகானே 89 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். எதிர்முனையில் பொறுப்புடன் ஆடிய தாகூர் 51 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். 

ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் கேப்டன் பேட் கம்மிங் மூன்று விக்கெட்டுகளையும் ஸ்காட் போலேன்ட், மிச்சல் ஸ்டாக் மற்றும் கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினார். நேத்தன் லியோன் ஒரு விக்கெட் வீழ்த்தினார். தற்பொழுது இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Team India all out for 296 in WTC 2nd innings


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->