பாரிசில் இன்று கோலாகலமாக தொடங்கும் பாராலிம்பிக் போட்டி! - Seithipunal
Seithipunal


உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிலையில், 33 வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்கி கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி நிறைவடைந்தது.

இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பாரிசில் பிரம்மாண்ட விழாவுடன் இன்று தொடங்குகிறது. இதில்,  4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ள நிலையில், இந்த போட்டிகள்  இன்று  தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளன. 

வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான பிளேஸ் டி லா கான்கார்ட்டில் பாராலிம்பிக் தொடக்க விழா நடைபெறும் நிலையில்,  இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். முதல் நாளான இன்று பாரா டேக்வாண்டோ, பாரா டேபிள் டென்னிஸ், பாரா நீச்சல் மற்றும் பாரா சைக்கிள் ஓட்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Paralympic competition will start with a bang today in Paris


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->