புரோ கபடி || தமிழ் தலைவாஸ்- புனேரி பால்டன் அணிகள் மோதல்.!
today tamil thalaivas and puneri paldan team match
பன்னிரண்டு அணிகளுக்கு இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா 2 முறை மோதும்.
அதன் படி இந்த தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - உ.பி. யோத்தாஸ் உள்ளிட்ட அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 57-36 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தி உ.பி. யோத்தாஸ் அபார வெற்றி பெற்றது
இந்த நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது . இன்றைய ஆட்டங்களில் இரவு 8 மணிக்கு முதலாவதாக தமிழ் தலைவாஸ்- புனேரி பால்டன் அணியும், இரவு 9 மணிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் - யு மும்பா உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன.
English Summary
today tamil thalaivas and puneri paldan team match