சென்னையில் இன்று தொடங்குகிறது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர்!
Ultimate Table season Tennis Series starts today in Chennai
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் 5-வது சீசன் போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று தொடங்குகிறது.
அடுத்த மாதம் செப்டம்பர் 7-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில், நடப்பு சாம்பியனான கோவா சேலஞ்சர்ஸ், முன்னாள் சாம்பியனான சென்னை லயன்ஸ், தபாங் டெல்லி டிடிசி, யு மும்பா டிடி, புனேரி பல்தான், பிபிஜி பெங்களூரு ஸ்மாஷர்ஸ் ஆகிய அணிகள் பட்டம் வெல்ல மோதுகின்றன. மேலும் அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ், ஜெய்ப்பூர் பாட்ரியாட்ஸ் ஆகிய இரு அணிகள் புதிதாக களமிறங்குகிறது.
ஒவ்வொரு ஆட்டமும் ஆடவர் ஒற்றையர், மகளிர் ஒற்றையர், கலப்பு இரட்டையர், ஆடவர் ஒற்றையர் மற்றும் மகளிர் ஒற்றையர் என 5 ஆட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும். ஒவ்வொரு ஆட்டமும் 3 செட்களை கொண்டதாக இருக்கும் நிலையில், இதில் எட்டு செட்களை கைப்பற்றும் அணி வெற்றி பெறும். லீக் சுற்றின் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில் தொடக்க நாளான இன்று இரவு 7.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில், கோவா சாலஞ்சர்ஸ் - ஜெய்ப்பூர் பாட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன. கோவா அணி ஹர்மீத் தேசாய் தலைமையிலும், ஜெய்ப்பூர் அணி ஸ்நேகித் தலைமையிலும் களமிறங்குகிறது. 17 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 16 சர்வதேச வீரர்கள் உட்பட மொத்தம் 48 வீரர், வீராங்கனைகள் விளையாட உள்ளனர்.
English Summary
Ultimate Table season Tennis Series starts today in Chennai