உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பே அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்திக்கும் இந்திய கிரிக்கெட் அணி!
Umran Malik and Kuldeep Sen do not travel to Australia as net bowlers
இந்திய அணி விளையாட போகும் 15 வது வீரர் யார்? வலை பயிற்சி பந்துவீச்சாளர்கள் செல்வதிலும் பிரச்சனை!
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை டி20 உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது. மொத்தம் 45 போட்டிகள் இந்த உலக கோப்பையில் நடைபெற உள்ளது. நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் அரையணி ஆட்டங்கள் சிட்னி மற்றும் அடிலட்டில் நடைபெற உள்ளன இறுதிப் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்திய அணியில் இடம்பெற்ற பும்ராவுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகினார். அதன்பின் மாற்று வீரரை தேர்வு செய்யும் முனைப்பில் இந்திய கிரிக்கெட் தேர்வு வாரியம் முயற்சி செய்து வருகிறது. இந்திய அணி தேர்வு வாரிய பட்டியலில் முகமது சாமி, தீபக சகர், மற்றும் முகமது சிராஜ் இடம்பெறித்திருந்தனர். இந்நிலையில் தீபக் சகருக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பை அணியில் இருந்து விலகினார்.
இதன் காரணமாக முகமது சாமி மற்றும் முகமது சிராஜுடன் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொள்கின்றனர். இவர்களில் ஒருவர் 15 வது வீரராகவும் மற்ற இருவர் வலை பயிற்சி பந்துவீச்சாளர்களாகவும் செயல்படலாம் என தெரிய வருகிறது. 15 ஆவது வீரருக்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
மேலும் வலை பயிற்சி பந்துவீச்சாளர்களாக உமர் மாலிக் மற்றும் குல்தீப் சென் ஆகியோர் இவர்களுடன் செல்ல இருந்தனர். ஆனால் ஆஸ்திரேலியா நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள விசா கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பயணம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இவர்களுக்கு பதிலாக சௌரப் குமார் மற்றும் சேட்டன் சர்க்காரியா ஆகியோர் வலை பயிற்சி பந்துவீச்சாளர்களாக ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
English Summary
Umran Malik and Kuldeep Sen do not travel to Australia as net bowlers