இனி என்னால் போராட முடியாது -  ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்.! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் 33 வது ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றில் தங்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனை வினேஷ் போகத், அனுமதிக்கப்பட்ட எடையை காட்டிலும் 100 கிராம் அதிகமாக இருந்ததால் நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

அவரது தகுதி நீக்கத்தை எதிர்த்து இந்திய ஒலிம்பிக் கமிட்டி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வினேஷ்க்கான வாய்ப்புகள் முடிந்து விட்டதாகவே சர்வதேச மல்யுத்த சங்கம் அறிவித்து விட்டது. 

இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷிற்கு பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளதாவது:- ''அம்மா, மல்யுத்த போட்டியில் நான் வெற்றி பெற்றேன், இருந்தாலும் நான் தோற்றேன். 

என்னை மன்னித்துவிடு. உங்கள் கனவு, என் தைரியம், அனைத்தும் உடைந்துவிட்டன, இனி என்னிடம் போராட சக்தி இல்லை.. குட்பை மல்யுத்தம் 2001-2024 ... உங்கள் அனைவருக்கும் நான் என்றும் கடமைப்பட்டிருப்பேன், மன்னிக்கவும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vinesh announce retirement for olympic disqualification


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->