உலகின் நான்காவது வீரர் என்ற பெருமையை பெறப்போகும் விராட் கோலி! - Seithipunal
Seithipunal



வேஸ்ட் இண்டிஸ்க்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நிலையில், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடரின் முதல் ஒருநாள் ஆட்டம் இன்று நடக்க உள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி புதிய சாதனை மற்றும் மைல்கல்லை எட்ட உள்ளனர்.

இன்று நடைபெறும் முதல் போட்டி அல்லது இந்த தொடரில் விராட் கோலி 102 ரன்கள் எடுத்தால், ஒரு நாள் தொடரில் 13,000 ரன்களை கடந்த உலகின் 4-வது வீரர் என்ற பெருமையை பெறுவார்.

முன்னதாக இந்த பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், குமார் சங்ககரா மற்றும் ரிக்கி பண்டிங்  13,000 ரன்களை கடந்து உள்ளனர்.

இதுவரை 274 ஒருநாள் போட்டிகளில் விளையாடிவுள்ள விராட் கோலி, 46 சதங்கள், 65 அரைசதங்களை அடித்து, 57.32 சராசரியுடன் உள்ளார்.

இதேபோல இந்திய அணியின் கேப்டன் ரோஹித் 175 ரன்கள் எடுத்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார். 

ரோஹித் சர்மா இவர் 243 ஒருநாள் போட்டிகளில் 30 சதங்கள், 48 அரைசதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat kohli and rohit may be new record


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->