விராட் கோலி, கவுதம் கம்பீர் வாக்குவாதம்.. இருவருக்கும் 100% போட்டி கட்டணம் அபராதமாக விதிப்பு..!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த 43-வது போட்டியின் பொழுது லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 என்ற எளிமையான இலக்கை லக்னோ அணிக்கு நிர்ணயித்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தால் லக்னவாணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்ற நிலையில் போட்டிக்கு பின்னரும் பரபரப்பான சூழல் நிலவியது. லக்னா அணி வீரர் நவீன் உல் ஹக் மற்றும் பெங்களூர் வீரர் விராட் கோலி இடையே 17வது ஓவரில் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை நடுவர் சமாதானம் செய்து வைத்தார்.

பின்னர் பெங்களூர் வெற்றி பெற்ற பின் இரு அணி வீரர்களும் சந்தித்தபோது லக்னோ வீரர் நவீன் பெங்களூர் வீரர் விராட் கோலி மீண்டும் மோதிக்கொண்டனர். இதனைக் கண்ட லக்னோ அணியின் தலைமை ஆலோசகர் கவுதம் கம்பீரும் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் மைதானத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதனை கண்ட லக்னோ வீரர் அமித் மிஸ்டர் இருவரையும் தனித்தனியே அழைத்துச் சென்றார். விதிகளை மீறி மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோலி, கவுதம் கம்பீருக்கு ஒரு போட்டியின் 100% கட்டணத்தை அபராதமாக ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது. அதேபோன்று நவீன் உள் ஆக்குக்கு 50% போட்டி கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat Kohli Gautam Gambhir 100 percentage match fee fined


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->