இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி ஓய்வு எடுக்க வேண்டும் - கெவின் பீட்டர்சன்.! - Seithipunal
Seithipunal


ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில் சூப்பர் 12 சுற்றுகளின் முடிவில் குரூப்-1 பிரிவு புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளும், அதனைத் தொடர்ந்து நாளை (நவம்பர் 10ம் தேதி) நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து  அணிகள் மோதுகின்றன.

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி 5 போட்டிகளில் 246 ரன்கள் குவித்துள்ளார். இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முக்கிய விரராக விராட் கோலி கருதப்படுகிறார்.

இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து போட்டி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி விடுமுறை எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என ஜாலியாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், கோலி சரியாக விளையாடாத போது நான் அவரை ஆதரித்தேன். அவர் ரசிகர்களை சந்தோஷப்படுத்த தெரிந்தவர். அவர் விளையாடும் போது அவருக்கு ரசிகர்கள் கூட்டம் தேவை. அவருக்கு உற்சாகமும் தேவை. ஆனால் சில வருடங்களாக அவருக்கு அது இல்லாததால் அவர் வழி தவறிவிட்டார். ஆனால் தற்போது ரசிகர் கூட்டம் அதிகமாக உள்ளது.

ஆஸ்திரேலியா போன்ற கிரிக்கெட் மைதானங்கள் டி20 போட்டிகள் விளையாடுவதற்கு சிறந்த மைதானங்களில் ஒன்று. இதனால் கோழி மீண்டும் சிறப்பாக விளையாடி வருகிறார். நெருங்கிய நண்பராக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி ஒரு நாள் விடுமுறை எடுக்க வேண்டும் என ஜாலியாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat Kohli rest semifinal match Kevin Pietersen


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->