விராட் கோலி ஆர்.சி.பி யை விட்டு வெளியேற வேண்டும் - அதிர்ச்சியை கிளம்பிய கெவின் பீட்டர்சன்!! - Seithipunal
Seithipunal


விராட் கோலி பெங்களூர் அணியை விட்டு வெளியேற வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து அணி கிரிக்கெட் வீரரும் வர்ணையாளருமான கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடங்கிய போது தொடர் தோல்விகளை சந்தித்த பெங்களூர் அணி லீக் போட்டியின் இரண்டாவது சுற்றில் தொடர்ந்து ஆறு போட்டிகளில் வென்று பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. கடைசியில் போட்டியில் சென்னை அணியை 18 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த பெங்களூர் அணி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆப்குள் நுழைந்தது.

ஐபிஎல் தொடர் தொடங்கி 17ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. ஆனால் இன்று வரை பெங்களூரு அணி ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வென்றதில்லை. இரண்டு முறை இறுதிப் போட்டிக்குள் சென்று பெங்களூர் அணி தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரரும் வர்ணையாளருமான கெவின் பீட்டர்சன் விராட் கோலிக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, விராட் கோலி ஒவ்வொரு முறையும் பெங்களூர் அணிக்காக சிறப்பாக விளையாடுகிறார். ஆனாலும் ஒரு அணியாக பெங்களூரு அணி தோல்வியை சந்தித்திகிறது. விராட் கோலி கோப்பையை வெல்ல தகுதியானவர் அதனால் அவர் பெங்களூரு அணியை விட்டு வெளியேற வேண்டும். வேறொரு அணிக்காக அவர் விளையாட வேண்டும். அந்த அணி டெல்லி அணியாக இருந்தால் விராட் கோலிக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat Kohli should leave RCB Kevin Pietersen


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->