சிங்கத்தை களமிறக்குங்க ! மீண்டும் தப்பான முடிவை எடுக்காதிங்க!
Wasim Jafar T20 Cricket Ishan Kishan IND vs WI
இன்று நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணிகளுக்கிடையான இரண்டாவது டி20 ஆட்டத்தில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இஷான் கிஷனை இறக்க வேண்டாம் என்று, இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் எனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
மேலும், இஷான் கிஷனுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்க வேண்டும் என்றும், வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், தொடர்ச்சியாக மூன்று அரை சதம் அடித்து இஷான் கிஷன் தன் திறமையை நிரூபித்துள்ளார்.
இருந்தாலும் என்னை பொறுத்தவரை, டி20 ஆட்டங்களில் தொடக்க ஆட்டக்காரராக யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தான் களம் இருக்க வேண்டும்.
இதற்கு என்னிடம் காரணம் இல்லாமல் இல்லை.
இஷான் கிஷன் டி20 ஆட்டங்களை பொறுத்தவரை சற்று மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். அவருடைய ஸ்ட்ரைக் ரெட் குறைவாகவே உள்ளது.
கடைசியாக அவர் ஆடிய 15 டி20 ஆட்டங்களில் ஒரு முறை கூட 40 ரன்கங்களை அவர் எட்டவில்லை. அவருடைய ஆட்டத்திறன் கேள்விக்குறியாகவே இருப்பது வருத்தம் அளிக்கிறது.
எனவே இஷான் கிஷனுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
ஐபிஎல் ஆட்டங்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது போலவே, இந்திய அணிக்காகவும் அவர் சிறப்பாக தனது பங்கை ஆற்றுவார் என்று நான் நம்புகிறேன்.
எனவே அவருக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் வாய்ப்பை வழங்க வேண்டும்" என்று வாசிம் ஜாஃபர் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
English Summary
Wasim Jafar T20 Cricket Ishan Kishan IND vs WI