உற்சாகமாக உள்ளது! அமெரிக்கா சூழ்நிலைக்கு என்னை மாற்றிக்கொள்வேன் - ரிஷப் பண்ட்!!
Wearing an Indian uniform after a long time gives a different feeling
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய சீருடை களத்திற்கு திரும்பி இருப்பது வித்தியாசமான உணர்வை தருகிறது. நான் ரொம்ப தவற விட்ட ஒரு விஷயம் இதுதான் என இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் அதிரடி ஆட்டக்காரருமான ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் அதிரடி ஆட்டக்காரருமான ரிஷப் பண்ட்கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவுடன் உயிர் தப்பினர். கால் முட்டிக்கு அறுவை சிகிச்சை அதிலிருந்து மீள்வதற்கான தொடர்ச் சிகிச்சை பயிற்சி என்று சுமார் 15 மாதங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தார்.
ஐபிஎல் மூலம் மீண்டும் அவர் அபாரமாக ஆடியதால் டி 20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கும் தேர்வானார். இந்த நிலையில் உலககோப்பை போட்டிக்கான அமெரிக்காவில் பயிற்சியை தொடங்கியுள்ள 26 வயதான ரிஷபன் கிரிக்கெட் வாரிய இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய சீருடை களத்திற்கு திரும்பி இருப்பது வித்தியாசமான உணர்வை தருகிறது நான் ரொம்ப தவற விட்ட ஒரு விஷயம் இதுதான்.
சக வீரர்களை மீண்டும் சந்திப்பதும் அவர்களுடன் ஜாலியாக உரையாடுவதும் நேரத்தை செலவிடுவதும் உண்மையிலேயே உற்சாகம் அளிக்கிறது. உலகம் முழுவதும் கிரிக்கெட் வளர்ந்து வருகிறது. இந்த டி20 உலக கோப்பை போட்டியில் அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலம் அடைவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று நினைக்கிறேன். அமெரிக்கா ஆடுகளங்கள் எல்லாமே புதியது. இங்குள்ள சூழ்நிலைக்கு என்னை பழக்கப்படுத்திக் கொள்கிறேன். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஆடுவேன் என்று நம்புகிறேன் என்றார்.
English Summary
Wearing an Indian uniform after a long time gives a different feeling