உலகக் கோப்பை டி20 தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட அதிரடி வீரர்!
West Indies player Hetmyer was removed from the World Cup series
விமானத்தைத் தவிர விட்டதால் உலகக் கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர்!
உலகக்கோப்பை டி20 தொடரானது ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்கான வீரர்களை அந்தந்த நாடுகள் அறிவித்ததோடு ஆஸ்திரேலியாவுக்கு செல்ல தயாராகி வருகின்றன. இன்னிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஷிப்ரன் ஹெட்மயர் உலகக்கோப்பை டி20 தொடர் போட்டிக்கான அணியில் இடம் பெற்றிருந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு செல்லக்கூடிய விமானத்தை தவறவிட்டதால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய இயக்குனர் ஜிம்மி ஆடம்ஸ் கூறியதாவது "குடும்ப காரணங்களுக்காக ஹெட்மியரின் விமானப்பயணம் சனிக்கிழமையிலிருந்து திங்கட்கிழமைக்கு மாற்றி அமைத்தோம். ஆனால் அவர் இன்று புறப்படும் விமானத்தையும் பிடிக்க விமான நிலையத்திற்கு சரியான நேரத்தில் செல்ல இயலாது என தெரிவித்து விட்டார்.
இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்வதில் தாமதங்கள் மற்றும் சிக்கல்கள் இருந்ததால் வேறு வழியின்றி அவரை அணியில் இருந்து நீக்கி விட்டோம்" என்று தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக ஷமர் ப்ரூக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
West Indies player Hetmyer was removed from the World Cup series