ஐபிஎல் 2023 : முக்கிய வீரர் விலகல், மாற்று வீரரைத் தேடும் பெங்களூர் அணி!
Will jacks ruled out of IPL 2023 due to injury
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வில் ஜேக்ஸ் காயம் காரணமாக இந்த சீசன் ஐபிஎல் முழுவதும் விலகி இருக்கிறார்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வில் ஜாக்ஸ் வங்கதேச அணியுடன் ஒரு நாள் தொடருக்கான அணியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, இரண்டாவது போட்டியில் காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டதில் காயம் அதிகம் என்று தெரிய வந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்க சில வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் ஐபிஎல் தொடர் முழுவதிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவர் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு இங்கிலாந்து அணிக்காக தயாராகும் விதமாக ஐபிஎல் போட்டியை முழுவதுமாக புறக்கணித்து இருக்கிறார். 3.2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாற்று வீரராக நியூசிலாந்து நாட்டைச் சார்ந்த மைக்கேல் பிரேஸ்வேலிடம் ஆர்சிபி அணி பேசி வருகிறது. அவர் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட நிலையில், அவரை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வராத நிலையில் தற்போது அவரிடம் பெங்களூர் அணி பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Will jacks ruled out of IPL 2023 due to injury