குளிர்கால ஒலிம்பிக், முதல் தங்கம் வென்றார் நார்வே வீராங்கணை.! - Seithipunal
Seithipunal


குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை நார்வே வீராங்கனை தேரேஸ் ஜோஹாக் வென்றுள்ளார்.

சீனாவின் பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன இதில் இந்தியா சீனா ஆஸ்திரேலியா ஜெர்மனி பிரான்ஸ் உள்ளிட்ட 21 நாடுகளை சேர்ந்த 2,871 பேர் பங்கேற்றுள்ளனர் ஏழு வகையான விளையாட்டு போட்டிகள் 109 பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது இந்தியா சார்பில் ஒரே ஒரு வீரர் மட்டுமே பங்கேற்றுள்ளார் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பனிச் சறுக்கு வீரர், ஆரிப் கான் ஒருவர் மட்டுமே பங்கேற்கிறார்.

நேற்று நடைபெற்ற க்ராஸ் கண்ட்ரி பனிச்சறுக்கு போட்டியில் 15 மீட்டர் ஸ்கைத்லான் பிரிவில், நார்வே நாட்டின் தெரேஸ் ஜோஹாக் முதலிடம் பிடித்து 24 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இது ஒலிம்பிக் போட்டியில் இவர் பெற்ற 4-வது தங்கமாகும். 

பெண்களுக்கான 3000 மீ. ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐரீன் ஸ்கவுடன் 3 நிமிடம், 56.93 வினாடிகளில் இலக்கை கடந்து உலக சாதனையுடன் தங்கப்பதக்கதை வென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Winter Olympic first gold medal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->