மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி : இன்று கோலாகல தொடக்கம்! - Seithipunal
Seithipunal


8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

பீகார் மாநிலத்தில்  உள்ள ராஜ்கிர் நகரில் இன்று 8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி
தொடங்குகிறது. இந்த போட்டியானது, வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் நிலையில்,  நடப்பு சாம்பியன் இந்தியா, சீனா, மலேசியா, ஜப்பான், தென் கொரியா  மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்க உள்ளது.

இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத உள்ளது. பின்னர்,  லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற உள்ளது.

அதன்படி, இந்த தொடரில் தொடக்க நாளான இன்று நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் ஜப்பான்- தென் கொரியா அணிகள் மோத உள்ளது. மேலும், இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மலேசியா உடன் இன்று மோதுகிறது.

குறிப்பாக, இந்திய அணி தனது எஞ்சிய லீக் ஆட்டங்களில் 12-ம் தேதி தென் கொரியாவையும், 14-ம் தேதி தாய்லாந்தையும், 16-ம் தேதி சீனாவையும், 17-ம் தேதி ஜப்பானையும் எதிர் கொள்ள உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women asian champions cup hockey kicking off today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->