2025 மகளிர் ஐ.பி.எல்... இன்று நடைபெறுகிறது வீராங்கனைகள் ஏலம்! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம் பெங்களூரில்இன்று நடைபெறுகிறது. இதில் 2025 மகளிர் ஐ.பி.எல். தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் எடுக்கப்படுகிறது. 

மகளிர் பிரீமியர் லீக் தொடர் கடந்த வருடம்  மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெற்றது . இந்த போட்டிகள் அனைத்தும் மும்பையில் உள்ள பார்ப்ரோன் மைதானத்திலும், டி ஓய் பட்டேல் மைதானத்திலும் நடைபெற்றன . 

 இந்தநிலையில் மகளிர் ஐ.பி.எல். (டபிள்யு.பி.எல்.) 2025 தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் பெங்களூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

91 இந்திய வீராங்கனைகள், 29 சர்வதேச வீராங்கனைகள் உள்பட மொத்தம் 120 வீராங்கனைகளை 5 அணிகளின் நிர்வாகங்கள் ஏலத்தில் எடுக்க உள்ளன. அதில் 30 வீராங்கனைகள் கேப் செய்யப்பட உள்ளனர். மீதமுள்ள 90 பேரில் 82 இந்திய வீராங்கனைகளும், 8 வெளிநாட்டு வீராங்கனைகளும் அடங்குவர். பெரும்பாலான அணிகள் முக்கிய வீராங்கனைகளை தக்க வைத்துள்ளனர். இதனால் 19 இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெறுகிறது. (இதில் 5 வெளிநாட்டு வீராங்கனைகளுக்கானது).

இந்த ஆண்டுக்கான ஏலத்தில் தேஜல் ஹஸாபனிஸ், ஸ்னே ராணா, டியன்ட்ரா டாட்டின் (வெஸ்ட் இண்டீஸ்), ஹீதர் நைட் (இங்கிலாந்து), ஒர்லா பிரெண்டர்கெஸ்ட் (அயர்லாந்து), லாரன் பெல் (இங்கிலாந்து), கீம் கார்த் (ஆஸ்திரேலியா), டேனியல் கிப்சன் (இங்கிலாந்து) ஆகியோர் அடங்குவர்.

அணிகளுக்கான தொகை:-

டெல்லி கேப்பிட்டல்ஸ் - 2.5 கோடி,

குஜராத் ஜெயண்ட்ஸ் - 4.4 கோடி,

மும்பை இந்தியன்ஸ் - 2.65 கோடி,

உ.பி. வாரியர்ஸ் - 3.9 கோடி,

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 3.25 கோடி.

நேரம்: வீராங்கனைகளுக்கான ஏலம் பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens IPL 2025 The auction is going on today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->