மகளிர் டி20 உலகக் கோப்பை - ஐசிசி அட்டவணை வெளியீடு! - Seithipunal
Seithipunal


மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 3-ம் தேதி தொடங்கும் நிலையில்,  இந்திய அணி வரும் அக்டோபர் 6 ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது.

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா, துபை நகரங்களில் நடைபெற உள்ளது.  போட்டிகள் முதலில் வங்கதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், அங்கு நிலவும் அரசியல் அமைதியின்மை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.

துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இரண்டு மைதானங்களில் மட்டுமே மொத்தம் 23 போட்டிகள் நடைபெறவுள்ளன. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் ஏ பிரிவிலும், பி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.

போட்டியில் ஒவ்வொரு அணியும் நான்கு குரூப் போட்டிகளில் விளையாடும், ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அக்டோபர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் அரையிறுதிக்கு முன்னேறும். அக்டோபர் 20 ஆம் தேதி துபாயில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens T20 World Cup ICC Schedule Released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->