பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அட்டவணை வெளியீடு! இந்தியா முதலில் எதிர் கொள்ளும் அணி எது தெரியுமா?
World cup womens cricket T20 schedule to be announced
மகளீர் உலக கோப்பை கிரிக்கெட் டி20 போட்டியில் 10 அணிகள் பங்கேற்பு!
மகளீர் உலக கோப்பை டி20 கிரிக்கெட்டின் 8வது தொடரானது தென்னாபிரிக்காவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடர் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட அணிகளில் குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேச அணிகளும், குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளும் இடம்பெறுகின்றன.
இந்திய மகளிர் அணி பொறுத்தவரை பிப்ரவரி 12ஆம் தேதி பாகிஸ்தான் அணியையும், பிப்ரவரி 15ஆம் தேதி வெஸ்டர்ன் அணியையும் ,18ஆம் தேதி இங்கிலாந்து அணியையும், 20ஆம் தேதி அயர்லாந்து அணியும் எதிர்கொள்கிறது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் கேப் டவுன் மைதானத்தில் பிப்ரவரி 26ம் தேதி நடைபெறுகிறது. தற்பொழுது ஏழு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன
English Summary
World cup womens cricket T20 schedule to be announced