உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி.. இந்திய வீரர் பஜ்ரங் பூனியா பதக்கம் வென்று அசத்தல்.! - Seithipunal
Seithipunal


உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கல பதக்கம் வென்றார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் 65 கிலோ எடைப் பிரிவில் ரெப்பேஜ் முறையில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் பஜ்ரங் புனியாவுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதில் புவர்ட்டோ ரிக்கோ பிராந்தியத்தைச் சேர்ந்த செபாஸ்டியன் ரிவேராவை 11-9 என்ற புள்ளி கணக்கில் வென்ற புனியா வெண்கலப் பதக்கம் வென்றார்.

 இந்த தொடரில் அவர் வெல்லும் 4-வது பதக்கம் இதுவாகும். 2013, 2018, 2019 மற்றும் 2022 என உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் புனியா பதக்கம் வென்றுள்ளார். 

இதில், 2018-ல் அவர் வெள்ளி வென்றிருந்தார். மற்ற அனைத்தும் வெண்கலப் பதக்கமாகும். சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World wrestling championship bagrang punia won bronze medal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->