மகளிர் ஐபிஎல்.. இன்று கடைசி 2 லீக் போட்டிகள்.. இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார்.?
WPL 2023 last league matches
முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 பங்கேற்று விளையாடி வருகின்றன. அதன்படி ஒவ்வொரு அணியும் மற்ற 4 அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும்.
இதில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதும். அதன்படி எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் இடத்தை பிடித்த அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது மகளிர் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய 3 அணிகள் ப்ளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மேலும், பெங்களூர் மற்றும் குஜராத் அணிகள் வெளியேறியது.
இதில் முதலிடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி 2 லீக் போட்டிகள் இன்று நடைபெற உள்ளது. இந்த 2 போட்டிகளின் முடிவில் தான் எந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது தெரியவரும்.
இதில் இன்று 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பெங்களூர் - மும்பை அணிகள் மோதுகின்றன. அதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் யுபி வாரியர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
English Summary
WPL 2023 last league matches