ஆட்டு வியாபாரி வீட்டில் ஜன்னலை உடைத்து 10 லட்சம் கொள்ளை!!! - திருப்பத்தூர் மாவட்டம்
10 lakhs looted from goat traders house after breaking window Tirupattur District
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அக்ராகரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான முத்து என்பவர்.இவர் ஆட்டு வியாபாரம் செய்து வருகின்றார். இவருக்கு ரமணாவதி என்ற மனைவியும் ஒரு பெண் பிள்ளை உள்ள நிலையில் இரண்டாவதாக ஆண் குழந்தைப் பிறந்துள்ளதால் அவர் அவரது தாயார் வீட்டில் உள்ளார்.
நேற்று இரவு முத்து, வீட்டைப் பூட்டிவிட்டு அவரது மாமியார் வீட்டிற்குக் குழந்தைகளை காணச் சென்றுள்ளார்.இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்கத்தில் உள்ள ஜன்னலைக் கடப்பாரை மற்றும் மர கோடளியால் வெட்டி உள்ளே புகுந்துள்ளனர்.

மேலும் பீரோவில் வைத்திருந்த 46 சவரன் தங்க நகைகள், 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.இன்று காலை வீட்டிற்கு வந்த முத்து பின்பக்க ஜன்னல் உடைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சடைந்துள்ளார்.
பின்பு உள்ளே சென்று பார்த்தபோது பணம் மற்றும் நகைகள் கொள்ளைப் போனது தெரியவந்தது.இந்தச் சம்பவம் குறித்து முத்து நாட்றம்பள்ளி காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஏ.டி.எஸ்.பி கோவிந்தராசு மற்றும் நாட்றம்பள்ளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஆட்டு வியாபாரி முத்து காவல்துறையிடம்,' எப்படியாவது எங்கள் நகைகள் மற்றும் பணத்தை மீட்டு தாருங்கள்' எனக் கதறி அழுதச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
10 lakhs looted from goat traders house after breaking window Tirupattur District