#திருப்பத்தூர்: மனவளர்ச்சி இல்லாத 10 வயது சிறுமிக்கு.. பக்கத்து வீட்டுக்காரரால் நிகழ்ந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பகுதியில் ராஜா என்ற 44 வயது கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி ஒருவர் தெருவில் விளையாடு கொண்டிருந்தபோது அவரை வீட்டிற்குள் அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவாகியிருக்கிறார். 

இதனை தொடர்ந்து, சிறுமி அழுதவாறு வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் தனக்கு நேர்ந்ததை கூறியுள்ளார். அவர்கள் உடனடியாக சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து விட்டு ராஜாவின் வீட்டிற்கு சென்று அவரை தேடியுள்ளனர். ஆனால், ராஜா வீட்டில் இல்லை அப்பொழுது ராஜாவின் மனைவியை வீட்டிற்கு வெளியே அனுப்பிவிட்டு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வீட்டை பூட்டு போட்டனர். 

இது குறித்த அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தலைமறைவாக இருந்த ராஜாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

இவர் ஏற்கனவே கடந்த 2021ல் தனது சொந்த மகளை பாலியல் துன்புறுத்தல் செய்து அதன் மூலம் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறை தண்டனை பெற்றவர். தற்போது மீண்டும் அவர் அதே குற்றத்தை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 year girl raped by 44 years old men


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->