சிறுமியை கடத்தி வன்கொடுமை செய்த நபர்.. 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!
10 years jail sentence for Man who sexully abused the girl
7 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், தானே கோட்பந்தர் சாலை பகுதியை சேர்ந்தவர் சாஜத். இவர் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி தனது வீட்டின் அருகே வசித்து வந்த அதே பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சாஜத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து, அவர் மீது போக்ஸோ வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கின் விசாணை முடிவடைந்த நிலையில், குற்றவாளி சாஜத்விற்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.13 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது.
English Summary
10 years jail sentence for Man who sexully abused the girl