மதுபிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்.... 100 மி.லி மது விற்பனை -எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை குடித்து 60-க்கு மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

ஆனால், பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் சூழ்நிலையில் தமிழ்நாடு இல்லை என்று அமைச்சர் முத்துச்சாமி சட்டசபையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சட்டசபையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், 'நமது பக்கத்தில் இருக்கும் கேரளா, கர்நாடகம், ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனை நடைபெறும்போது, நாம் மட்டும் எப்படி பற்றி கொள்ளாத கற்பூரமாக இருக்க முடியும்' என்றுத் தெரிவித்தார்.

எனவே, ஏழை மக்கள் கள்ளச்சாராயம் வாங்குவதற்கு பதில் குறைந்த விலையில் மது வாங்குவதற்கு ஏற்ற வகையில் மலிவு விலை மது விற்பனையை தொடங்க தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. அதனால், மது உற்பத்தி நிறுவனங்களை பொறுத்தவரை 'டெட்ரா பேக்' மூலம் மது தயாரிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்த மாதக்கணக்கில் கால அவகாசம் தேவை என்று கூறப்படுகிறது.

ஆகவே, உடனடியாக அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் தமிழக அரசு 100 மி.லிட்டர் கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் மதுவிற்பனை செய்யலாமா? என்றும் பரிசீலித்தது. அதில் பிளாஸ்டிக் பாட்டில்தான் சிறந்தது என்று தெரியவந்தது. அரசு உரிய முடிவு எடுத்த பிறகு தான் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

100 ml bottles sales in tamilnadu tasmac


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->