தொடரும் ரேஷன் அரசி கடத்தல்! புழல் அருகே 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசிகளை வெளிமாநிலங்களுக்கு தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசிகளை வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என கூறப்படுகிறது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தமிழக அரசியல் வழங்கப்படும் ரேஷன் அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கடுத்துவதை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர் 

இந்தநிலையில், நேற்று புழல் சிக்னல் அருகில் ரகசியமாக கண்காணித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில் மூட்டைமூட்டையாக 8 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. வேனை ஓட்டிவந்தவரை பிடித்து விசாரித்ததில் சென்னையில் இருந்து ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்துள்ளது.

மினிமவேனுடன் 8 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக சென்னை மூலக்கடை பகுதியை சேர்ந்த வசந்த் மற்றும் மாரியப்பன் ஆகிய இருவரை  கைது செய்து சிறையில் அடித்தனர். இதுபோல் செங்குன்றம் டோல்கேட் அருகே ஆந்திராவுக்கு கடத்தல் சென்ற 3 டன் ரேஷன் அரிசியும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 tons of ration rice seized near Puzhal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->