அடுத்தடுத்து நிகழும் சோக சம்பவம்.. +1 வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே மிட்டாநூலஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பூரணபிரதாஷ் (வயது 17). இவர், ஏலகிரி அருகே பாட்டி வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் மாணவர் பூரணபிரதாஷ்க்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவதிக்குள்ளான பூரணபிரதாஷ், மிட்டாநூலஅள்ளியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு நேற்று இரவு சென்றுள்ளார்.

அப்போது மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலியை தாங்க முடியாத மாணவர் பூரணபிரதாஷ் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்த தகவலறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11th std students hanged in tharmapuri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->