தமிழகத்தில் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்.. முகக்கவசம் அணிய கட்டாயம்.!
12 th public exam students compulsory wear mask
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி வரும் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு வெற்றிகரமாக பொதுத் தேர்வை நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
மாநிலம் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுத உள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் 3119 தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் 12ம் வகுப்பு தேர்வு மையங்களுக்கு புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் கட்டாயமோ கவசம் அணிய வேண்டும்.
தேர்வு மையங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையே 6 அடி இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும்.
கிருமிநாசினி கொண்டு தேர் வகைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் அவசியம்.
தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளுதல் கட்டாயம்.
கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை தேர்வு மையங்களில் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
English Summary
12 th public exam students compulsory wear mask