மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மாயமான வேட்டி - சேலைகள்.! போலீசார் விசாரணை.!
12000 worthable vesti sarees missing in madurai collector office
ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்களுக்கு இலவச-வேட்டி சேலைகள் வழங்கப்படும். அதன் படி, மதுரை வடக்கு தாலுகாவிற்கு உட்பட்ட மக்களுக்கு வழங்க 12 ஆயிரத்து 500 வேட்டி-சேலைகள் கடந்த அக்டோபர் மாதம் கொள்முதல் செய்யப்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குடோனில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், நேற்று மேலும், வேட்டி-சேலைகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டது. அப்போது, அதிகாரிகள் பூட்டை திறக்க முயன்றனர். ஆனால் திறக்க முடியாததால், அந்த பூட்டை உடைத்து உள்ளே போய் பார்த்தனர்.
அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த 12 ஆயிரத்து 500 இலவச வேட்டி-சேலைகள் காணாமல் போனது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் இருக்கும். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள், ஆட்சியருக்குத் தகவல் அளித்தனர்.
உடனே ஆட்சியர் சங்கீதா, சம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்து, கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
12000 worthable vesti sarees missing in madurai collector office