தமிழகத்தில் வாட்டி வதைத்து எடுக்கும் வெயில்.. 17 இடங்களில் சதமடித்த வெயில்.!
14.06.2022 heatwave 100 plus paranheat 17 places in tamilnadu
தமிழகத்தில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, மழை ஒரு பக்கம் பொழிந்தாலும், பல்வேறு இடங்களில் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், நாளை முதல் 16/06/2023 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும், ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று 17 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், மீனம்பாக்கத்தில் 104 டிகிரி ஃப்ரான்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
மேலும், தூத்துக்குடி, மதுரை விமான நிலையம், கடலூர், மதுரை நகரம், நாகை ஆகிய பகுதிகளில் 103 டிகிரி ஃப்ரான்ஹீட்டும், பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, தஞ்சாவூர், திருச்சி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட்டும், வேலூர், திருத்தணி, கரூர் பரமத்தி, காரைக்கால், ஈரோடு ஆகிய பகுதிகளில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
English Summary
14.06.2022 heatwave 100 plus paranheat 17 places in tamilnadu